சென்னை அரும்பாக்கத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர போட்டுத்தள்ளிய மர்ம கும்பல்
சென்னை: சென்னை சூளைமேட்டில் வியாபாரிகள் சங்கத் தலைவர் முகமது ரபீக்கை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தது.
சூளைமேடு பெரியார் பாதையைச் சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் முஸ்லிம் சிறுபான்மையினர் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் தனி சங்கத்தை தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். அரும்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் மீன்மார்க்கெட்டுகளையும் நடத்தி வந்தார்.
நாள்தோறும் இரவு நேரத்தில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஆதிலா மேன்சனில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்து வீட்டுக்குச் செல்வது முகமது ரபீக்கின் வழக்கம். இதன்படி நேற்று இரவு ஆதிலா மேன்சனில் கணக்குகளைப் பார்த்துவிட்டு திரும்பிய ரபீக்கை அதற்கு அருகே உள்ள தெருவில் மறைந்திருந்த கும்பல் சராமாரியாக தாக்கி போட்டுத்தள்ளியது. ரத்தவெள்ளத்தில் கிடந்த ரபீக் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
யார் காரணம்?
ரபீக் தலைவராக இருந்த சங்கத்தின் சார்பில் சில நாட்களுக்கு முன்பு தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டது. அதில் சங்கத்தின் செயலாளர் சலீம்பாபுவின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறி தகராறு நடந்துள்ளது. இது குறித்து சலீம்பாபுவும் அவரது சகோதரி காதர்பீவியும் முகமது ரபீக்கின் வீட்டுக்கே சென்று எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இவர்கள் இருவரும் தலைமறைவாகவும் உள்ளனர். இதனால் இவர்கள்தான் கூலிப்படை மூலம் முகமது ரபீக்கை கொலை செய்திருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications