இலங்கை செல்லும் குழுவில் அனைத்து கட்சி எம்.பி.க்கள்: 14ல் பிரதமரை சந்திக்கும் பாஜக
மதுரை: இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்த தானும், இல.கணேசனும் வரும் 14ம் தேதி பிரதமரை சந்திக்கவிருப்பசாக பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் பாஜக மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பந்தல் அமைக்கும் பணியைப் பார்வையிட பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மதுரைக்கு நேற்று வந்தார்.
பணிகளைப் பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மதுரை நடக்கும் மாநில மாநாட்டில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக மாநில தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் ஒரு லட்சம் பேர் பாஜகவில் இணையவிருக்கிறார்கள். இது தமிழகத்தில் பாஜகவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்.
வரும் 28ம் தேதி மாநாடு துவங்குகிறது. வரும் 29ம் தேதி பிரதிநிதிகள் மாநாடும், 30ம் தேதி பாஜகவின் சாதனைகளை எடுத்துக்கூறும் கண்காட்சியும் நடக்கிறது. சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதகளும் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்த நானும், இல. கணேசனும் வரும் 14ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தவிருக்கிறோம் என்றார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications