சென்னையில் மேலும் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோயால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 40 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி அறைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உறவினர்களும் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை நகரில் மட்டும் இதுவரை 21 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 32 வயது இளைஞரான அந்த நபருக்கு தனி அறையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே பன்றிக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசு கண்காணித்து வருகிறது. பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்புக்குள்ளானோர் குறித்த விவரங்களை அரசுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகளை அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+