பஞ்சாயத்துத் தலைவியின் கணவர், மச்சானை தாக்கியதாக உதயக்குமார் மீது வழக்கு

இடிந்தகரையை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மனைவி சகாய பெக்லின்ஏஜிடின். இவர் விஜயாபதி பஞ்சாயத்து தலைவி. இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இவர்களது நடவடிக்கையில் கடந்த சில தினங்களாக மாற்றம் ஏற்பட்டதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இடிந்தகரை ஊராட்சியில் கூட்டம் நடைபெறுவதாக கூறி கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கினர். அப்போது கவுன்சிலர் ஒருவர் உண்ணாவிரத பந்தலில் இருந்தார். அணு உலைக்கு எதிரான செயலில் நான் ஈடுபட மாட்டேன் என்று தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்தார்.
இந்நிலையில் நேற்று சகாயராஜ், அவரது அண்ணன் ஸ்டாலின், மைத்துனர் இன்னாசி ஆகியோர் இடிந்தகரைக்கு சென்று அங்கு தண்ணீர் திறக்கும் ஊழியர்களிடம் சாவியை பறித்துக் கொண்டு சென்றனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த இடிந்தகரை மக்கள் சகாயராஜை தேடினர். அப்போது அவர் எதிரே காரில் வந்துக் கொண்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த இடிந்தகரை மக்கள் சுமார் 20 பேர் காரை வழிமறித்து அவர்களை தாக்கினர். இதில் சகாயராஜ், அவரது அண்ணன் ஸ்டாலின், இன்னாசி ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து ஸ்டாலின், சகாயராஜ் ஆகியோர் கூடங்குளம் போலீசில் தனிதனியாக புகார் அளித்தனர்.
அதில் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி எங்களை உதயகுமார் தலைமையிலான கும்பல் வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் போரட்டக்குழு ஓருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜன், இனிகோ, மில்டன், வெனிஷ், சங்கீத் உள்பட சிலருக்கு தொடர்பு உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்த உதயகுமார் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தசம்பவம் இடிந்தகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications