மெக்சிகோ பெண் திடீர் மாயம்- கிருஷ்ணன் கோவில் போலீஸ் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் அருகே மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மாயமாகியுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள தனியார் பல்கலை ஆராய்ச்சியாளர் மெக்சிகோவை சேர்ந்த மார்ட்டின் மான்ரிக். இவரது மகள் அடிலா, வயது 5.
இவரது உறவினரான மெக்சிகோவை சேர்ந்த தினோசியா, 36, கேரளா கலா மண்டல பல்கலைக்கு நடன பயிற்சிக்காக வந்தார். மாதம் ஒருமுறை கிருஷ்ணன்கோவிலுக்கு அடிலாவை பார்க்க வருவார்.
ஏப். 9 ம்தேதி கிருஷ்ணன் கோவிலில் இருந்து, இவரை கேரளாவுக்கு மார்ட்டின் மான்ரிக் பஸ்சில் ஏற்றி அனுப்பினார். அதன் பின்னர் அவரிடமிருந்து தகவல் இல்லை. இது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசில் மார்ட்டின் மான்ரிக் புகார் கொடுத்தார். காணாமல் போன தினோசியா குறித்து கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் மூக்கன் விசாரிக்கிறார்.












Click it and Unblock the Notifications