சென்னையில் சிக்கிய போலி பெண் ஐபிஎஸ் அதிகாரி-கைவரிசை குறித்து 'ஷாக்' தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பிடிபட்டுள்ள போலி பெண் ஐ.பி.எஸ். பற்றி ஒவ்வொருநாளும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி வந்து கொண்டே இருக்கின்றன.

சென்னையில் சிக்கிய போலி பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி விஜயாபானு தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே புழல் சிறையில் விஜயபானு காட்டிய ஆட்டம்தான் சுவாரசியமானது.

புழல் சிறையில் ஊழல் நடப்பதாககவும் அதனை கண்காணிக்க தாம் வந்திருப்பதாகவும் கூறி 4 பெண் சிறை வார்டன்களிடம் இருந்து ரூ25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை ஆட்டே போட்டுள்ளார்.

ஒரு பெண் வார்டன் 22 சவரன் நகைகளையும், ரூ.3 லட்சம் பணத்தையும் கொடுத்திருக்கிறார். இன்னொரு பெண் வார்டன் 25 சவரன் நகைகளையும், மற்றொருவர் 20 சவரன் நகைகளையும் வாரி கொடுத்துள்ளார்.

2009-ம் ஆண்டு திருட்டு வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தாம் டெல்லியில் பணிபுரியும் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்றும் திருட்டு வழக்கில் தாம் கைதாகி வந்திருப்பது ஒரு நாடகம் என்றும் கூறியுள்ளார். சிறையில் நடக்கும் ஊழல்களை கண்டுபிடிக்கவே குற்றவாளியாக வந்திருப்பதாகவும் கதை அளந்துவிட்டிருக்கிறார்.

திருட்டு வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த விஜயபானு தொடர்ந்தும் புழல் மற்றும் வேலூர் சிறைகளுக்கு சோதனை என்ற பெயரில் அடிக்கடி உள்ளே சென்று வந்துள்ளார்.

வார்டன்கள் குடியிருப்பிலும்கூட விசாரணை நடத்துவதாகக் கூறிக் கொண்டு வீடியோ கேமிராவுடன் சென்றும் வந்திருக்கிறார்.

விஜயபானுவின் சர்வ சாதாரணமான இந்த மோசடி நாடகத்தை சிறைத்துறை அதிகாரிகள் எப்படி நம்பினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து விசாரணை அறிக்கை வந்தவுடன் முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+