விருதுநகர் அருகே இலவச ஆடு கொடுக்கா பஞ்சாயத்து தலைவியின் உறவினருக்கு கத்தி குத்து
விருதுநகர்: விருதுநகரில் தனக்கு இலவச ஆடு கிடைக்காத ஆத்திரத்தில் பஞ்சாயத்து தலைவியின் உறவினரை ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
விருதுநகர் அருகே உள்ள சத்திர ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (40). அந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் இலவச ஆடுகள் வழங்கப்பட்டபோது அவருக்கு ஆடு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சத்திர ரெட்டியபட்டியை பஞ்சாயத்து தலைவியின் கணவர் ரவிச்சந்திரனின் அண்ணன் ராமசாமியைப் பார்த்த கருப்பசாமி தனக்கு ஏன் இலவச ஆடுகள் வழங்கப்படவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு ராமசாமி, தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் தான் ஆடுகள் வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கருப்பசாமி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர் ராமசாமியை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் கருப்பசாமியை தேடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications