அதிகாரமிக்க 100 உலக தலைவர்கள் பட்டியலில் மமதா: மோடிக்கு இடமில்லை
நியூயார்க்: டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2012ம் ஆண்டில் உலகின் அதிகாரமி்கக 100 தலைவர்கள் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு 92வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இடம்பெற்ற குஜராத் முதல்வர் மோடியின் பெயர் இந்த ஆண்டு பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டைம் பத்திரிக்கை 2012ம் ஆண்டில் உலகின் அதிகாரமிக்க 100 தலைவர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அரசியல் தலைவர்கள், கார்டூனிஸ்டுகள், நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் அடக்கம்.
இந்த ஆண்டு பட்டியலில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜிக்கு 92வது இடம் கிடைத்துள்ளது. சிரியாவைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் அலி பெர்சாத், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரபல முதலீட்டாளர் வாரன் பஃப்பட், பாகிஸ்தானில் முதன்முதலாக ஆஸ்கர் விருது பெற்ற ஷர்மீன் உபைத் சினாய், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஹில்லாரி கிளிண்டன், பேஸ்புக் சிஓஓ ஷெரில் சாண்ட்பர்க் உள்ளிட்டவர்களின் பெயர்களில் இந்த பட்டியலில் உள்ளது.
மமதா பானர்ஜி பல ஆண்டுகளாக கடுமையாகப் போராடி தனது கட்சியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார் என்று அந்த பத்திரிக்கை புகழ்ந்துள்ளது. மமதாவை டைம் பத்திரிக்கை புகழந்துள்ள அதே நேரத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியரை கைது செய்ததற்காக மமதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்க்கண்டேய கத்ஜு.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அதிகாரமிக்க தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த குஜராத் முதல்வர் மோடியின் பெயர் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications