காஞ்சீபுரம் 'செக்ஸ்' அர்ச்சகர் தேவநாதன் வழக்கு: மே 16ம் தேதி விசாரணை

Subscribe to Oneindia Tamil

Devanathan
காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் 'செக்ஸ்' அர்ச்சகர் தேவநாதன் மீதான வழக்கு வரும் மே மாதம் 16ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன் (35). கோவில் கருவறையில் பல பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு அதை தனது செல்போனிலேயே படம் பிடித்து வைத்து வந்தார்.

இவரது செல்போன் ரிப்பேருக்குப் போனபோது அந்த வீடியோக்கள் வெளியே பரவின. இதையடுத்து இவர் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவான தேவநாதன் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களை மயக்கி கருவறைக்குள்ளேயே வைத்து தேவநாதன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இவர் தந்த வாக்குமூலத்தையடுத்து இதில் சம்பந்தப்பட்ட 4 பெண்களையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

கோவிலுக்கு சென்ற போது அர்ச்சகர் தேவநாதன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கருவறைக்குள் அழைத்து சென்று உறவு வைத்தாகவும், இதை செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு அதை காட்டி மிரட்டியே கோவில் கருவறையில் செக்ஸ் லீலையில் ஈடுபட்டார் என்றும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இந் நிலையில் தேவநாதன் கடந்த 2010ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் எந்தக் கோவிலிலும் அர்ச்சனை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், இந்த நீதிமன்றத்தில் கடந்த 10 மாதங்களாக நீதிபதியே இல்லாததால் எந்த வழக்கு விசாரணையும் நடக்கவில்லை.

எல்லாமே தேங்கிக் கிடந்தன. இந் நிலையில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிபதியாக பணிபுரிந்த ஆனந்தி, பதவி உயர்வு பெற்று செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 28ம் தேதி பொறுப்பேற்றதையடுத்து தேங்கிக் கிடந்த வழக்கு விசாரணைகள் மீண்டும் தொடங்கின.

இதில், செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு அடுத்த மாதம் 16ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+