கூவாகத்தில் திருநங்கைகளின் கோயிலில் திருவிழா தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
கூவாகம்: ஆண்டுதோறும் திருநங்கைகள் சங்கமிக்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று தொடங்கியது.
சாகை வார்த்தல் என்ற நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழாவில் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூழ் குடங்களை சுமந்து வந்து கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.
இன்று முதல் மகாபாரத நிகழ்ச்சி நடைபெறுகிறது.முக்கிய நிகழ்ச்சியான அரவான் களப்பலியாதல் சம்பவம் மே 1 ந் ம் தேதி மாலை நடைபெறுகிறது. அன்று திரண்டு வந்து தாலி கட்டிக் கொள்ளும் திருநங்கைகள் அரவான் தேரோட்டத்தின் போது தாலி அறுத்து ஒப்பாரி வைத்து புலம்புவர்.
பின்னர் அங்கேயே நீராடி வெள்ளை ஆடை உடுத்தி சொந்த ஊர் திரும்புவர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.











Click it and Unblock the Notifications