மதுரை உலகத் தமிழ் சங்கத்திற்கு புதுப்பொலிவூட்டப்படும்: அமைச்சர் சிவபதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் உள்ள உலகத் தமிழ் சங்கத்திற்கு மீண்டும் புத்துப்பொலிவூட்டப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி அறிவி்ததுள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது அதற்கு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி பதில் அளித்தார்.

அதன் பிறகு அவர் வெளியிட்ட அறிவிப்பு,

தமிழ் வளர்ச்சித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சிமொழி திட்ட செயலாக்கப்பணிகள், தமிழ் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், ஆட்சி சொல்லகராதி போன்றவற்றை அரசு அலுவலர்களும், பொதுமக்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறைக்கென ரூ.5 லட்சம் செலவில் தனியாக ஒரு வலைத்தளம் அமைக்கப்படும்.

சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் துறைசார்ந்த வல்லுனர்களை அழைத்து, ஆர்வமுள்ள இளம் எழுத்தாளர்களுக்கு கவிதை, கட்டுரைப் பயிற்சியும், பேச்சாளர்களுக்கு பேச்சுப் பயிற்சியும் ஒருவார காலத்திற்கு அளிக்கப்படும்.

ஆட்சித்தமிழ் நூல் அடிப்படையில் ஆட்சிமொழி வரலாறு, ஆட்சிமொழிச் சட்டம், ஆட்சிமொழி செயலாக்கம் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும், அரசுப்பணியாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்படும்.

வெளிநாட்டு நூலகங்களில் உள்ள அரிய தமிழ் நூல்கள், ஒரு கோடி ரூபாய் செலவில் அச்சிட்டு வெளியிடப்படும்.

வெளிநாட்டு மொழியியல் அறிஞர்களால் எழுதப்பட்ட தமிழ் மொழியின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்த கருத்துகள் அனைத்தையும் திரட்டி தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல்கள் வெளியிடப்படும்.

இன்றைய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வல்லுனர் குழு அமைத்து அறநெறிக்கருவூலம்' என்ற கையேடு உருவாக்கப்படும்.

சங்ககாலம் முதல் இந்தக் காலம் வரை தமிழ் மொழியில் உள்ள புகழ் வாய்ந்த பொன்மொழிகளை இலக்கியம் வாரியாக தொகுத்து பொன்மொழி களஞ்சியம்' வெளியிடப்படும்.

சிறந்த நூல் பரிசு திட்டத்தில் மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் ஆகிய இருவகைகள் உருவாக்கப்படும்.

மதுரையில் உள்ள உலகத்தமிழ் சங்கம் மீண்டும் புதுப்பொலிவூட்டப்படும். அங்கு தனி அலுவலர், நிதி அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், டிரைவர், அலுவலக உதவியாளர்கள் ஆகிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+