ஷார்ஜா இந்திய வர்த்தகக் குழுவின் தலைவராக அகர்வால் 6வது முறையாக தேர்வு

புதிய நிர்வாகிகளுக்கான தேர்வு ஷார்ஜா இந்திய வர்த்தகக் குழு அலுவலகம் அமைந்துள்ள ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற்றது. இதில் 6வது முறையாக சுதேஷ் கே. அகர்வால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இப்பதவியில் இருப்பார்.
அவருடன் டாக்டர் சன்னி குரியன், சஞ்சீவ் பாட்டியா, கே.வி.சம்சுதீன், டாக்டர் அபய் கே. பாண்டே, கல்யாண் பட்டாச்சார்யா, லலித் ரத்தோர், லாலு சாமுவேல், சஜு அகஸ்டின், தன்வீர் கன்ஜி, டாக்டர் ஜி எம். பாஜ்பாய் மற்றும் சபீர் ரோகாடியா உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தன்மேல் நம்பிக்கை வைத்து தன்னை ஆறாவது முறையாக தலைவராகத் தேர்வு செய்த நிர்வாகக் குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இக்குழுவின் மூலம் மட்டுமே அமீரக இந்திய வர்த்தகம் குறித்த காலாண்டு இதழ் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது என்றார். இக்குழுவின் மூலம் அமீரக சிறைகளில் வாடும் இந்தியர்களுக்கு உதவிட நிதியம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications