ஸ்டாலினை வரவேற்க வேண்டும் என்பது திமுகவில் சட்டமா என்ன?: அழகிரி

முன்னதாக மதுரையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய நேர்காணலையும், ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தையும் மதுரை மாவட்டத்தின் அனைத்து திமுக நிர்வாகிகளும் புறக்கணித்தனர்.
பொதுக் கூட்டத்துக்கு திமுக சார்பில் போலீசாரிடம் அனுமதி வாங்கிய திமுக பிரமுகரே கூட்டத்துக்கு வரவில்லை. மேலும் கூட்ட ஏற்பாடுகளை செய்யக் கூட ஆள் இல்லாமல் தடுமாறிவிட்டனர் இளைஞரணியினர். வெளி மாவட்டங்களில் இருந்து திமுகவினரை வரவழைத்துத் தான் அந்த வேலையை செய்து முடித்தனர்.
அழகிரியின் உத்தரவின் பேரிலேயே திமுகவினர் ஸ்டாலினை புறக்கணித்தனர் என்பது சின்னப் புள்ளைக்குக் கூடத் தெரியும் என்பதால், இந்த விவகாரத்தை திமுகவால் மூடி மறைக்க முடியவில்லை.
கூட்டத்தை புறக்கணித்தது குறித்து விளக்கம் கேட்டு அழகிரி ஆதரவாளர்களுக்கு திமுக அமைப்புச் செயலர் டிகேஎஸ் இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந் நிலையில், அரசு முறை பயணமாக சீனா சென்று விட்டு மதுரை திரும்பிய அமைச்சர் அழகிரி நிருபர்களிடம் பேசுகையில், திமுக பொருளாளர் ஸ்டாலின் நேர்காணல் மற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தது குறித்து எனக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அப்படி வருபவர்களை வரவேற்க வேண்டும் என்று திமுகவில் சட்டம் ஏதும் இல்லை. மதுரையில் நேற்று நடைபெற்ற ரகசிய கூட்டம் பற்றிய விபரமும் எனக்குத் தெரியாது. இப்போதுதான் சீனாவில் இருந்து வந்துள்ளேன். கட்சிப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications