வரி உயர்வால் ஏ.சி விற்பனையில் பாதிப்பு அதிகரிக்கும்!
Subscribe to Oneindia Tamil

புதிய விதிமுறைகளால் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் 15 முதல் 20 விழுக்காடு வரை உற்பத்திச் செலவு அதிகரிக்க உள்ளது.
இதனால் ஏ.சி. சாதனங்களின் விலை சுமார் ரூ3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது 20 முதல் 25 வரை விழுக்காடு உயர்வாகும். இதனால் கொளுத்தும் வெயிலில் ஏ.சி. வாங்கி மாட்டலாம் என்று கருதுவோருக்கு சுமையாக இருக்கும். ஏ.சி.யின் விலை கணிசமாக உயர்ந்துபோனதால் அவ்வளவு ஈசியாக ஏசியை யாரும் வாங்கிவிடமாட்டார்கள் என்றே கருதப்படுகிறது. இதனால் ஏ.சி.யின் விற்பனை 25 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளது என்கிறது அசோசெம் அமைப்பு.
மேலும் ஏ.சி. உற்பத்தி நிறுவனங்களுன் லாபமும் கணிசமாக பாதிக்கப்படக் கூடிய நிலையே காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications