பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை மன்னர் குடும்பத்திடமிருந்து அரசு எடுத்துக் கொள்ளாது! - கேரளா
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள மாநில ஏற்காது என்று அம்மாநில உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு பத்மநாபசுவாமி கோயிலைப் பார்வையிட்ட அவர் ஆலய வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை மாநில அரசு ஏற்காது. அப்படியான ஒரு எண்ணம் கிடையாது. கோயிலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பும் கடமையாகும். திருவாங்கூர் மன்னர் வம்சத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுதான் கோயில் நிர்வாகத்தை நிர்வகிக்கிறது. இதில் மாநில அரசு தலையிட்டு மேலும் புதிய சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை.
மத்திய ரிசர்வ் வங்கிக்கு இணையாக பத்மநாபசுவாமி கோயிலுக்கு 24 மணி நேர பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. கமாண்டோ படையினருடன் மாநில போலீசார் இணைந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அறைகளில் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.
பெருஞ்செல்வங்கள் குவிந்துள்ள இக்கோயில் திருவிதாங்கூர் மன்னர் வசமத்தினர் எனும் தனியாரிடம் இருப்பதைவிட மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே சரியானது என்று பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரை எதிர்த்துக் கொள்ள முடியாத மாநில அரசு, கோயில் நிர்வாகத்தை ஏற்க முடியாது என கைவிரித்துள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications