தூத்துக்குடியில் இன்வெர்ட்டர் வெடித்து பியூட்டி பார்லர் நாசம்: ரூ. 1 லட்சம் சேதம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் இன்வெர்ட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் பார்லரில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
தூத்துக்குடி ரயில்வே ஒன்றாம் கேட் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பசுபதி. அவரது மனைவி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் பியூட்டி பார்லரை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பார்லர் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் அங்கு இருந்த அழகு சாதனப் பொருட்கள், பர்னிச்சர்கள், ஷோகேஸ்கள், இன்வெர்ட்டர் மற்றும் மாடியில் அமைக்கப்பட்டிருந்த கூரை செட் போன்றவை எரிந்து நாசமாகின.
இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முருகன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
பியூட்டி பார்லரில் இன்வெர்ட்டர் ஆப் செய்யாமல் இயங்கிய நிலையில் இருந்துள்ளது. இப்பகுதியில் நேற்றிரவு அடிக்கடி மின்தடை ஏற்பட்டுள்ளது. அப்போது உயர் மின்அழுத்தம் காரணமாக இன்வெர்ட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இது குறித்து மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications