பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த கும்பலைக் காப்பாற்றும் காவல்துறை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் சமூக விரோதிகள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தைச் கண்ணப்பன் மகள் வெண்ணிலா என்ற பள்ளி மாணவியை அதே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த மாணவி அணிந்திருந்த நகைகளையும் பறித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் நடந்து 10 நாட்களாகியும் இதுவரை காவல்துறையினர் புகார் கூறப்பட்ட நபர்களிடம் எந்த விசாரணையும் நடத்தவும் இல்லை. மாறாக மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மாணவியை அழைத்துச் சென்று தடயங்களை அழிக்க முயற்சித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும் பயனில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே திருக்கோவிலூரில் இருளர் இனப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட போதும் காவல்துறை இதேபோன்ற மெத்தனப் போக்கையே கடைபிடித்தது. இந்நிலையில் மாணவி ஒருவர் சீரழிக்கப்பட்ட சம்பவத்திலும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+