''மீட்டிங் எத்தனை மீட்டிங்கடா''- அலெக்ஸ் பால் மேனனின் பிளாக்கிலிருந்து!

Subscribe to Oneindia Tamil

Alex Paul Menon
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ள சட்டிஸ்கர் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் குறைகுடம் என்ற தலைப்பில் ஒரு பிளாக்கை வைத்துள்ளார். அவ்வப்போது அதில் அவர் எழுதி வந்துள்ளார். சமீப காலமாக பணியில் பிசியாக இருந்ததால் அவர் கடந்த சில மாதங்களாக எழுதவில்லை.

அவரது பிளாக்கிலிருந்து ஒரு துளி அப்படியே அவரது வார்த்தைகளில்

அரசு எந்திரம் கிரீஸ் (மாமூல் )இல்லாது ஓடாது என்பார்கள். அது மீட்டிங் பெட்ரோல் இல்லாமல் ஓடவே ஓடாது போலிருக்கிறது. பொழுதன்னிக்கும் யாராவது எடுக்கற மீட்டிங்க்ல பங்கு எடுக்கறதும் இல்லன்னா நாமளே மீட்டிங் எடுத்து அடுத்தவன் நுங்க எடுக்கறதும் .... என்ன பொழப்புடா இது...

சரி நாய் வேஷம் போட்டாச்சு குரைச்சுத் தொலையலாம்னா குரைக்கரத வச்சித் தான்யா மார்க்கே போடுறாய்ங்க ... விடிய விடியக் காவக் காத்திருந்தாலும், நாப்பது திருடன விரட்டி இருந்தாலும், நாலஞ்சு பாம்பு தேளைக் கடிச்சுத் துப்பி இருந்தாலும், விசுவாசமா எரிஞ்ச பந்தையெல்லாம் ஓடி ஓடிப் பொறுக்கி இருந்தாலும் கரெக்டா எசமான் பாக்கும்போது குரைக்குரோமா அதுவும் அவருக்கும் பிடிச்ச மாதிரி தொனியிலக் குரைக்குரோமாங்கரதப் பொறுத்துத் தான் அடுத்த மீட்டிங் கூடிய சீக்கிரமா இல்ல எசமான் உங்கக் குரைப்புலக் கூலாகி கொஞ்சம் நிதானமாக் கூப்பிடலாம்னு முடிவெடுக்கறாரான்னு பாக்கணும்.

இப்போல்லாம் வீடியோக் கான்பிரன்சிங்க்னு கொஞ்சம் கௌரவமா அதிகமா அலைய விடாம உக்காந்த இடத்துல குரைக்கலாம்..... இருந்தாலும் சில எசமாங்களுக்கு என்னமோ நேர்ல குரைச்சுக் காட்டுனாத் தான் பிடிக்குது ....Barking Dogs Never Bite னு சும்மாவா சொன்னான் வெள்ளைக்காரன்.... ... மீட்டிங்க்ல குரைக்குறது நாயானாலும் எசமானானாலும் குரைக்கற நாய் கடிக்காதப்பேய்.....ஏன்னா நிசம்மா காவக் காக்கறது சும்மா லேசா உறுமிக் காட்டினாலே ஊருப்பட்ட திருடனெல்லாம் சொந்த ஊருக்கு நிலங்கண்ணியப் பாக்கப் போயிருவானப்பு .....

இதுக்கு என்னென்ன பேருன்றீங்க.... ரிவ்யு மீட்டிங்னுவாய்ங்க , ஓரியன்டேசன் மீட்டிங்னுவாய்ங்க , ரெவின்யு மீட்டிங்னுவாய்ங்க, போர்ட் மீட்டிங்னுவாய்ங்க டீம் மீட்டிங்னுவாய்ங்க ஸ்டாப் மீட்டிங்னுவாய்ங்க.

இதுல காலக் கொடுமை என்னன்னா கிடைச்ச captive audience இவங்க எப்படி எல்லாம் தன்னோட சுய தம்பட்டத்துக்கும் சுய பிரதாபத்துக்கும் பயன்படுத்திக்குவாங்கன்றதுக்கு ஒரு எல்லையே கிடையாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+