21 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு-ஏடிஜிபி ஆனார் சைலேந்திர பாபு

Subscribe to Oneindia Tamil

Sylendra Babu
சென்னை: தமிழகத்தில் 21 காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உள்பட மொத்தம் 27 பேர் புதிய பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை வடக்கு மண்டல ஐஜியாக இருந்து வந்த சைலேந்திர பாபு, கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளின் பெயர்கள், அவர்கள் வகித்த பழைய பதவி, புதிய பதவி விவரம்:

1. சைலேந்திரபாபு- வடக்கு மண்டல ஐ.ஜி- கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டி.ஜி.பி.

2. கரன்சின்ஹா - ஐஜி, சிவில்சப்ளை போலீஸ் சி.ஐ.டி.- ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.

3. பிரதீப்.வி.பிலிப் -போலீஸ் அகாடமி ஐ.ஜி.- போலீஸ் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.

4. ரமேஷ் குடவாலா - சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி- போலீஸ் நலப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.

5. விஜயகுமார்- மும்பை போதைப்பொருள் தடுப்பு ஐ.ஜி- மும்பை போதைப்பொருள் தடுப்பு கூடுதல் டி.ஜி.பி.

6. எஸ்.ராஜேந்திரன் - மாநில போக்குவரத்து திட்ட ஐ.ஜி.- மாநில போக்குவரத்துத் திட்ட கூடுதல் டி.ஜி.பி.

7. மகேஷ்குமார் அகர்வால் - சி.பி.ஐ. டி.ஐ.ஜி- அதே பிரிவில் ஐ.ஜி.

8. ஜி.வெங்கட்ராமன் - லஞ்ச ஒழிப்பு டி.ஐ.ஜி.- அதே பிரிவில் ஐ.ஜி. மற்றும் இணை இயக்குனர்.

9. வினித்தேவ் வாங்கடே - தொழில் நுட்பபிரிவு டி.ஐ.ஜி.- அதே பிரிவில் ஐ.ஜி.

10. சஞ்சய் மாத்தூர் - திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.- மதுரை போலீஸ் கமிஷனர் மற்றும் ஐ.ஜி.

11. சக்திவேலு- வேலூர் சரக டி.ஐ.ஜி. -போலீஸ் அகாடமி ஐ.ஜி.

12. ஆர்.ஆறுமுகம்- தொழில் நுட்பப்பிரிவு ஐ.ஜி - பொருளாதார குற்றப்பிரிவு (2) ஐ.ஜி.

13. ஆர்.தினகரன்- ரெயில்வே சூப்பிரண்டு- ரெயில்வே டி.ஐ.ஜி.

14. அவி.பிரகாஷ் - மத்திய உளவுப்பிரிவு சூப்பிரண்டு- அதே பிரிவில் டி.ஐ.ஜி.

15. வித்யா டி.குல்கர்னி - சி.பி.ஐ. சூப்பிரண்டு - அதே பிரிவில் டி.ஐ.ஜி.

16. ஏ. அருண் - 15-வது பட்டாலியன் விசேஷ போலீஸ் படை கமாண்டண்ட்- தலைமையக டி.ஐ.ஜி.

17. கல்பனா நாயக்- ஆந்திர போலீஸ் சூப்பிரண்டு- அதே பிரிவில் டி.ஐ.ஜி.

18. எம்.டி.கணேசமூர்த்தி - சி.பி.சி.ஐ.டி.(2) சூப்பிரண்டு.- வேலூர் சரக டி.ஐ.ஜி.

19. சி.சந்திரசேகர்- தமிழ்நாடு காகித ஆலை விஜிலன்ஸ் அதிகாரி- அதே பிரிவில் தலைமை விஜிலன்ஸ் அதிகாரி மற்றும் டி.ஐ.ஜி.

20. சி.ஈஸ்வரமூர்த்தி- சி.பி.ஐ. சூப்பிரண்டு- அதே பிரிவில் டி.ஐ.ஜி.

21. கே.சண்முகவேல்- தமிழ்நாடு கமாண்டோ படை சூப்பிரண்டு- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.

இடமாற்றத்திற்குள்ளான அதிகாரிகள்

22. அருள்செல்வம்- மதுரை நகர தலைமையக துணை கமிஷனர்- திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.

23. டி.பி.சுந்தரமூர்த்தி- கோவை போலீஸ் கமிஷனர்- மேற்கு மண்டல ஐ.ஜி.

24. ஏ.கே.விசுவநாதன்- தமிழ்நாடு காகித ஆலை தலைமை விஜிலன்ஸ் அதிகாரி - கோவை கமிஷனர்.

25. பி.கண்ணப்பன் - மதுரை போலீஸ் கமிஷனர்- வடக்கு மண்டல ஐ.ஜி.

26. சுனில்குமார் - நவீனமயமாக்கல் ஐ.ஜி.- சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.

27. ஜெ.மகேஷ்- சங்கரன்கோவில் உதவி சூப்பிரண்டு- தூத்துக்குடி டவுண் உதவி சூப்பிரண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+