For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகே இறுதி முடிவு: தா. பாண்டின் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

Tha Pandian
திண்டுக்கல்: புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தான் அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திண்டுக்கலில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் மின்வெட்டு காரணமாக குறு, சிறு தொழில்கள், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பியிருக்கும் பல லட்சம் தொழிலாளர்கள் முடங்கிக் கிடக்கின்றனர். மின் உற்பத்தி குறைவால் பல கோடி ரூபாய் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் இடம் பெறாத தூதுக்குழு இலங்கை சென்று வந்துள்ளது. உலக அரங்கில் மனித உரிமை மீறல் விசாரணை நடத்து கொண்டிருக்கும் போது தூதுக்குழுவினர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து விருந்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களை இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள நிலை குறித்து அறிந்து வரச் செய்ய வேண்டும். அது தான் ஜனநாயக முறை. அதற்கு இலங்கை அரசு தயாரா என்று கூற வேண்டும்.

ஒதுக்கப்பட, தண்டிக்கப்பட, திருத்தப்பட வேண்டிய நாடு இலங்கை. அங்கு தமிழர்கள் மனித உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தான் அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

English summary
CPI state secretary Tha. Pandian has told that the party will decide whether to contest in Pudukkottai bypoll or not only after the election date is announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X