இத்தாலிக்கு ஆதரவாக வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் நீக்கம்!
திருவனந்தபுரம்: கேரள கடல்பகுதியில் 2 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி அரசுக்கு சாதகமாக வாதிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர் ஹரேன் ராவல் மாற்றப்பட்டுள்ளார்.
கேரள கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர் உள்பட 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் மாசி இலியானோ, ஜிரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுளளனர். கேரள அரசும், கேரள அரசுக்கு இந்த வழக்கை நடத்த அதிகாரம் இல்லை என்று கூறி இத்தாலி அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல் துப்பாக்கிச்சூடு சம்பவம் சர்வதேச கடல்பகுதியில் நடந்துள்ளதால் கப்பலை பிடித்து வைக்க கேரள அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், கப்பலை விடுவிக்க எந்த ஆட்பேசனையும் இல்லை என்றும் கூறினார்.
திடீரென மத்திய அரசு வழக்கறிஞர் இத்தாலி அரசுக்கு சாதகமாக கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு உச்ச நீதிமனறமும் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் மத்திய அரசின் வழக்கறிஞர் ஹரின் ராவலை இந்த வழக்கில் இருந்து மாற்றக்கோரி மத்திய சட்டதுறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு கேரள முதல்வர் உம்ம ன்சாண்டி கடிதம் எழுதினார். இதையடுத்து இந்த வழக்கில் இருந்து ஹரின் ராவலை மத்திய அரசு அதிரடியாக மாற்றியுள்ளது. அவருக்கு பதிலாக அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி இந்த வழக்கில் ஆஜராகவிருக்கிறார்.












Click it and Unblock the Notifications