ராமஜெயம் கொலை வழக்கு: முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவிடம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

Rajasekaran
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்குத் தொடர்பாக திருச்சி மாவட்டம் தொட்டியம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பிதான் ராமஜெயம் கடந்த மார்ச் 29ம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை நடந்து முடிந்து ஒரு மாதத்தை நெருங்கப் போகிறது. ஆனால் இதுவரை கொலைக்கான காரணமோ அல்லது கொலையாளிகள் யார் என்ற விவரமோ தெரியவில்லை. பெரும் மர்மாக உள்ளது.

ரியல் எஸ்டேட்காரர்களால் கொலை செய்யப்பட்டார் என்று முதலில் தகவல்கள் வந்தன. அரசியல் பழிவாங்கல் என்று இன்னொரு செய்தி கூறியது. பெண் விவகாரம் காரணமாக கொலையானதாக ஒரு செய்தி வெளியானது. இப்படி அடுத்தடுத்து ஏகப்பட்ட கதைகள் வந்தனே தவிர கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் 7 தனிப்படைகளை அமைத்து திருச்சி போலீஸார் பல கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பலரைப் பிடித்தும் விசாரித்துப் பார்த்தனர். தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவரைக் கூட பிடித்து விசாரித்தனர். சில முக்கிய ரவுடிகளையும் ஒரு ரவுண்டு விசாரித்து முடித்து விட்டனர்.

ராமஜெயத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. சிறையில் உள்ள மற்றும் வெளியில் உலாவரும் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து அவர்களிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

ராமஜெயத்தை கடத்துவதற்கு பயன்படுத்தியது மாருதி எக்கோ கார் என்பது தெரிய வந்ததால் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இந்த காரை பயன்படுத்துவோர் பட்டியலையும் தயார் செய்து அதில் சந்தேகத்துக்குரியவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்திவிட்டனர். ஆனாலும் இன்னும் துப்பு கிடைத்தபாடில்லை.

இந் நிலையில் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டம் தொட்டியம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட அவரிடம் தனிப்படை உதவி கமிஷனர் ஜெயச்சந்திரன் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். மணல் குவாரி தொடர்பாக ராமஜெயத்திற்கும், ராஜகேரனுக்கு முன்விரோதம் இருந்ததாகத் தெரிய வந்ததால் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் திருச்சியில் உள்ள கே.என்.நேரு அலுவலகத்திலேயே ராமஜெயத்துக்கும் ராஜசேகரனுக்கும் சில மாதங்களுக்கு முன் வாக்குவாதம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+