மதுரையில் நிலத்தகராறில் அடிதடி: முன்னாள் திமுக மேயர் தேன்மொழியின் கணவர்- மகன் கைது
மதுரை: நிலத்தகராறு தொடர்பாக வழிமறித்துத் தாக்கிய மதுரை மாநகராட்சியின் முன்னாள் திமுக மேயர் தேன்மொழியின் கணவரும் திமுக பிரமுகருமான கோபிநாதனும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை திமுக பகுதி செயலாளர் கோபிநாதன் முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவராவார். இவருக்கும், சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் ரூ.29 லட்சம் மதிப்புள்ள காலிமனை வாங்கியது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந் நிலையில் நேற்று ஜெய்ஹிந்த்புரத்தில் தன்னை வழிமறித்து தாக்கியதாக கோபிநாதன், அவரது மகன் பிரபாகரன் ஆகியோர் மீது சுப்பிரமணியன் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து கோபிநாதனையும், அவரது மகன் பிரபாகரனையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சுப்பிரமணியன் மீது கோபிநாதன் ஒரு புகார் கொடுத்தார். இரு தரப்பிலும் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் ஆபாசமாக பேசுதல், வழிமறித்து தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
கைதான மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேலம் அருகே திமுகவினர் கோஷ்டி மோதல்:
இந் நிலையில் சேலம் அருகே முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்களுக்கும், ஸ்டாலின் ஆதரவாளரான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனின் எதிர் கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்தூர் அருகே உள்ள கம்மம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக வந்த பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனிடம், வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளரான நகராட்சி செயலாளர் ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications