சங்கரன்கோவிலில் ஒரு 'பஞ்ச தந்திரம்'... கணவன், மனைவிக்கு நடுவே படுத்து சில்மிஷம் செய்த வாலிபர்!

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: பஞ்சதந்திரம் படத்தில் வருவதைப் போல நிஜத்தில் ஒரு சம்பவம் சங்கரன்கோவிலில் நடந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்.

பஞ்சதந்திரம் படத்தில் ஒரு காமெடிக் காட்சி வரும். வீட்டில் சந்தான பாரதியும், அவரது மனைவி கோவை சரளாவும் படுத்திருப்பார்கள். அப்போது 'உச்சா' போவதற்காக சந்தான பாரதி எழுந்து போவார். அந்த சமயத்தில் தெரியாமல் வீட்டுக்குள் நுழையும் கமல்ஹாசனை, தனது கணவர்தான் என்று நினைத்து கோவை சரளா படுக்கையில் தள்ளி விடுவார். இந்த சமயத்தில் சந்தான பாரதி வந்து விடுவார். இதை வைத்து காமெடி செய்திருப்பார்கள்.

இதேபோன்ற ஒரு சம்பவம் சங்கரன்கோவிலில் நடந்துள்ளது. கணவன், மனைவிக்கு இடையே புகுந்த ஒரு விஷமம் பிடித்த வாலிபர், மனைவியிடம் தவறாக நடந்து கொண்டு தப்பியுள்ளார்.

அழகாபுரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பெயர் ராமலட்சுமி. 41 வயதாகும் ராமலட்சுமி, தனது கணவருடன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். கணவர் அசந்து தூங்கி விட்டார். இந்த நிலையில், அவர்களுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வராஜ் என்ற வாலிபர் வீட்டுக்குள் நைசாக புகுந்தார்.

தூங்கிக் கொண்டிருந்த ராமலட்சுமி மற்றும் மாரியப்பனுக்கு நடுவே படுத்துக் கொண்டார். பி்ன்னர் ராமலட்சுமியிடம் சேட்டை செய்யத் தொடங்கினார். தூக்க கலக்கத்தில் இருந்த ராமலட்சுமி, கணவர்தான் இப்படிச் செய்கிறார் என நினைத்து பேசாமல் இருந்தார்.

இதை பயன்படுத்திக் கொண்ட செல்வராஜ் அத்துமீறத் தொடங்கினார். இப்படியாக சில நிமிடங்கள் ஓடி விட்டன. இந்த சமயத்தில் தூக்க கலக்கத்தில் திரும்பிய மாரியப்பன் தனது கையை கீழே போட்டுள்ளார். அது ராமலட்சுமி மீது பட்டது. புதிதாக ஒரு கை வந்து விழுகிறதே என்று திடுக்கிட்ட ராமலட்சுமி பட்டென்று எழுந்து பார்த்தபோதுதான் தன்னிடம் இத்தனை நேரம் அத்துமீறியது பக்கத்து வீட்டு செல்வராஜ் என்று தெரிய வந்தது.

இதைப் பார்த்து அவர் அலறி கத்தினார். இதைத் தொடர்ந்து செல்வராஜ் ஓடி விட்டார். கணவர் என்று நினைத்து செல்வராஜை அத்துமீற விட்டு விட்டோமே என்ற வேதனையில் கதறியழுதார் ராமலட்சுமி.

இந்த சம்பவம் குறித்து திருவேங்கடம் போலீஸில் மாரியப்பனும், ராமலட்சுமியும் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+