வேலூர் அருகே கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் பலி!

செல்வராஜ் (வயது50) என்பவர் தலைமையில் தகரகுப்பம் கிராமத்திற்கு இந்த எட்டுபேரும் கிணறு வெட்ட ஆட்டோவில் சென்றனர்.
தலங்கை ரோட்டில் விநாயகபுரம் என்ற இடத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அங்கு ரோட்டு ஓரத்தில் இருந்த கிணற்றில் தலைகுப்புற பாய்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த செல்வராஜ், குமார்(16), சித்ரா(30), ராணி, அபத், மற்றொரு சித்ரா ஆகிய தண்ணீரில் மூழ்கி பிணமானார்கள்.
சாமிக்கண்ணு என்பவர் நீச்சல் தெரிந்ததால் அவர் உயிர் தப்பினார். ஆட்டோ டிரைவர் பெருமாள் இந்த விபத்தில் பலியானார். கிணற்றில் இருந்து சத்தம் வந்ததால் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் பார்த்தனர். அப்போது ஆட்டோ விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் பரவியதும் சம்பவ இடத்துக்கு பதறியடித்து கொண்டு பெருதுமக்கள் ஓடிவந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வாலாஜாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றில் விழுந்து இறந்த 7 பேரின் உடல்களை வாலாஜாபேட்டை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.












Click it and Unblock the Notifications