கேரளாவில் மழை-புளியங்குடியில் எலுமிச்சை விற்பனை மந்தம்

நெல்லை மாவட்டம் புளியங்குடியில் உள்ள எலுமி்ச்சை மார்க்கெட் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. அதே போல் உற்பத்தியிலும் புளியங்குடி வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கிறது.
இப்பழங்களை விற்பனை செய்வதற்காக புளியங்குடியில் எலுமி்ச்சை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. 27 கடைகள் மூலம் விவசாயிகள் கொண்டு வரும் பழங்கள், ஆயிரம் பழங்கள் இன்ன விலை என்றும், அதே போல் இந்த ஆண்டும் இந்த விலை எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு கொள்முதல் செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் கேரள மாநிலத்திற்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள மக்களின் தேவை போக பெரும்பாலான எலுமிச்சை பழங்கள் கன்டெய்னரில் அடைக்கப்பட்டு விமானம் மற்றும் கப்பல் மூலம் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செயயப்படுகிறது.
இதன் மூலம் அரசுக்கு பெருமளவு அந்நிய செலவாணி கிடைக்கிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு இதே போல் ஏப்ரல் மாதத்தில் புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டில் ஆயிரம் எலுமிச்சை பழங்கள் ரூ.5000 வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இன்றைய நிலவரப்படி அதிகபட்சமாக ரூ.3000 வரை விற்கப்பட்டு வருகிறது.
இதற்கு கடந்த 10 தினங்களாக கோடை மழை இடை இடையே பெய்ததும், கேரளாவில் ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருவதும் எலுமிச்சை விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளதாக காரணங்கள் கூறப்படுகின்றன.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications