மறைந்த முத்துக்குமரன் நினைவுகளில் கண்ணீர் சிந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்
நெடுவாசல்: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்து சாலை விபத்தில் பலியான எம்.எல்.ஏ. முத்துக்குமரனின் படத்திறப்பு நிகழ்ச்சி அவரது சொந்த கிராமமான நெடுவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, டி. ராஜா, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், விஸ்வநாதன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனர்.
முத்துக்குமரன் படத்தை திறந்து வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் பேசியதாவது:
இழப்புகளையும் சோதனைகளையும் சந்தித்து வளர்ந்த இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். முத்துக்குமரன் குடும்பம் ஒரு துளி கண்ணீர்கூட விட அனுமதிக்க விட மாட்டோம்.
முத்துக்குமரன் ஆற்றிய பணி எங்கள் கட்சிக்கு பெருமை என்றால் அப்படிப்பட்ட தோழரை இழந்து விட்டோமே என்று துடிக்கிறோம். முத்துக்குமரன் எடுத்துக் கொண்ட கொள்கை கோட்பாடுகளை செங்கொடி இயக்கம் காப்பாற்றும் என்றார் அவர் கண்ணீர் மல்க.
மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு பேசியதாவது:
எதிர்கால சந்ததிகளுக்கு முத்துக்குமரன் விட்டுச் சென்றது இலக்கணமான வாழ்க்கையை தான். அந்த இலக்கண பாடத்தில் இளைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக அவர் ஆற்றிய பணிகள், சட்டமன்ற கேள்விகள், பேச்சுகள் அனைத்தும் புத்தகமாக வெளி வரும் என்றார் அவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா பேசியதாவது:
புதுக்கோட்டைக்கு நான் 1991-ம் ஆண்டு வந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள தங்க வேண்டும் என்று கூறினர். அப்போது என் கூடவே இருந்து எனக்கு தேவையான மருந்து, உணவு வாங்கி வந்து கொடுத்து பணிவிடை செய்து என்னை உயிர் பிழைக்க வைத்த என் உயிர் தோழன் முத்துக்குமரன் இன்று இல்லை என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கண்ணீருடன் பேசினார்.
முன்னாள் திமுக எம்.பி. ராஜா சிதம்பரம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முத்துக்குமரனை புகழ்ந்து பேசினர்.
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications