ஆட்சியர் அலெக்ஸை மீட்க தூத்துக்குடி பேராசிரியருக்கு சத்தீஸ்கர் மாநில அரசு அழைப்பு
தூத்துக்குடி: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனனை மீட்பதற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோயல் ரிவிங்ஸ்டனுக்கு அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அலெக்ஸ்பால் மேனனை மீட்பதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு ஏற்கெனவே பிரதிநிதிகளை நியமித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணியாற்றும் ஜோயல் ரிவிங்ஸ்டன், சத்தீஸ்கர் மாநில முதல்வருக்கு தந்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் மாவோயிஸ்டுகளுடன் பேச்சுநடத்த தாம் தயாராக இருப்பதாக ஜோயல் கூறியிருந்தார்.
ஜோயலின் விருப்பத்தை ஏற்று அவரை சத்தீஸ்கர் மாநிலத்துக்கு வருமாறு மாநில முதல்வர் ராமன்சிங்கின் உதவியாளர் குப்தா அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் சத்தீஸ்கர் புறப்பட்டுச் செல்கிறார். சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங்கை நாளை அவர் சந்திக்க உள்ளார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜோயல், ஆட்சியரின் சொந்த ஊரை சேர்ந்தவர் என்ற முறையில் ஒரு கல்லூரியின் முதல்வராக பணியாற்றும் நான் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் அவரை மீட்பதற்காக மாவோயிஸ்டுகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு செல்ல தயாராக இருக்கிறேன்" என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications