மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்: அப்துல் கலாம் மறைமுக தகவல்

கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்று சில கட்சிகள் கோர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் பாஜகவில் சில தலைவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கலாமை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்பவில்லை. சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பதால் அவரை பிரதமராகாமல் தடுத்தார் கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தச் செய்தியை கலாம் ஒப்புக் கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை.
இதனால் 2007ம் ஆண்டு மீண்டும் அவரையே ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த பாஜக முன் மொழி்ந்தபோது அதை கலாம் ஏற்றுக் கொண்டார். ஆனால், காங்கிரஸ் ஏற்கவில்லை. இதையடுத்து மீண்டும் பதவிக்கு வர விரும்பவில்லை என்று கூறி கடைசி நேரத்தில் கலாம் ஒதுங்கிக் கொண்டார்.
இந் நிலையில், மீண்டும் அவரை முன் நிறுத்த பாஜக மற்றும் சில கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதற்கிடையே இன்று டெல்லியில் கலாமை சந்தித்த நிருபர்கள், மீண்டும் ஜனாதிபதியாக நீங்கள் தயாரா என்று கேட்டதற்கு,
இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள்.. அதன் பின்னர் இந்தக் கேள்வியை என்னிடம் கேளுங்கள் என்று கலாம் பதிலளித்தார்.
இதனால், அவர் மீண்டும் பதவிக்கு வரத் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. இந்த விஷயத்தில் காங்கிரசுக்கு நெருக்கடி தரவே அவர் இவ்வாறு பதில் தந்ததாகவும் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications