அடி மாட்டு விலைக்கு பிரதமரின் ஆலோசகர் நாயரின் உறவினர்களுக்கு வீட்டு மனை!

பி.இ.எம்.எல். என்றும் பெமல் என்றும் அழைக்கப்படும் அரசுத்துறை நிறுவன ஊழியர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கம் பெங்களூரில் 2008-ல் விற்ற வீட்டு மனைகளில் டி.கே.ஏ. நாயரின் சகோதரி மகள் ஏ. பிரீத்தி பிரபா, குடும்ப நண்பர் உமாதேவி நம்பியார் ஆகியோருக்கு விற்கப்பட்டன.
இந்த மனைகள் பெமலில் வேலை செய்வோருக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஆனால் நிறுவனத்தின் ஊழியர்கள் அல்லாத 2 பெண்களுக்கு குறைந்த விலையில் மனை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவதாக ஒரு மனையும் வெளியாருக்கு விற்கப்பட்டது, அவரும் நாயரின் உறவினர் என்று பெமல் ஊழியர் பெரியசாமி புகார் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து வீட்டு மனைகளை சர்ச்சைக்குரிய இருவரும் ஒப்படைத்தனர். மூன்றாம் நபர் ஒப்படைக்கவில்லை. இந்த வீட்டு மனை விவகாரத்துக்கும் ராணுவத்துக்கு தாத்ரா வாகனங்களைக் கொள்முதல் செய்ததற்கும் ஒரு தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதாவது பி.இ.எம்.எல். தலைவராக உள்ள நடராஜன், தமது தாத்ரா ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருக்கவே பிரதமர் ஆலோசகர் நாயரின் உறவினர்களுக்கு வீட்டு மனைகளை லஞ்சமாக ஒதுக்கீடு செய்தார் என்பதுதான் பெரியசாமி போன்றோரின் புகார். ஆனால் நடராஜன் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஆனால் நாயரின் தொடர்பு இதில் தெளிவாக இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அதேசமயம், இதுகுறித்து எந்த விவரமும் தங்களுக்குத் தெரியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் அல்வி கூறுகையில், எனக்கு இதுகுறித்து ஒன்றும் தெரியாது. விவரம் தெரிந்த பிறகே கருத்துக் கூற முடியும் என்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications