நாசா விண்வெளி மையத்தை பார்வையிட அமெரிக்கா செல்லும் 100 பள்ளி மாணவர்கள்
சென்னை: அமெரிக்காவில் இருக்கும் நாசா விண்வெளி மையத்தை பார்வையிட சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் 100 பேர் அமெரிக்கா செல்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு இந்திய மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் மாணவர்களை அமெரிக்காவில் இருக்கும் நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த ஆண்டு சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் 100 பேர் மற்றும் அவர்களுக்கு துணையாக ஆசிரியர்கள் 5 பேரும் அமெரிக்கா செல்கிறார்கள்.
அவர்கள் நாளை சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார்கள். அமெரிக்கா செல்லும் அவர்கள் நாசா விண்வெளி மையம், கனடாவில் உள்ள விண்கல் மையம் ஆகியவற்றை பார்வையிட்டு அங்குள்ள விஞ்ஞானிகளையும் சந்தித்து பேசுகிறார்கள்.
நாசா செல்லும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. அதில் அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்ன்டையர், கனடா தூதரக முதுநிலை வர்த்தக ஆணையாளர் சாஹூன் வேடிக், விண்வெளி வீராங்கனை மார்ஷா ஐவின்ஸ், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா திட்ட இயக்குனர் ஸ்ரீமதி கேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்ஷா ஐவின்ஸ் நாசா குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். நாளை அமெரிக்கா செல்லும் மாணவர்கள் வரும் 16ம் தேதி சென்னை திரும்புகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications