என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைகிறது- கரண்ட் கிடைப்பதில் சிக்கல்வரும்!
நெய்வேலி: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் தீவிரமடைகிறது. சுரங்கம் முன்புகூடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மின்உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 21-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
பிரச்சினையை தீர்க்க 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு வந்தபாடில்லை. இந்த நிலையில், 27-ந்தேதி என்எல்சி 2-வது சுரங்கம் முன்பு மறியலில் ஈடுபட்டனர் தொழிலாளர்கள். இதையடுத்து 2000 தொழிலாளர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தி விடுவித்தனர்.
இந்த நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்பில் பதில்மனு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், போராட்டத்தை தொடரவும் தீர்மானித்தனர்.
இன்று காலை நெய்வேலி நிறுவன பஸ் நிலையத்தில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் பேரணியாக என்எல்சி முதல் சுரங்கம் நோக்கி புறப்பட்டு சென்றனர். பின்னர் சுரங்கம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் சுரங்கததில் நிலக்கரி வெட்டியெடுப்பது உள்ளிட்ட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மின் உற்பத்தி குறையும் அபாயம் எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications