கெட்டப்பை மாற்றுகிறார்... தலையில் முடி வளர்க்கும் மோடி!

மோடியைப் பொறுத்தவரையில் எப்போதும் பாக்கெட்டில் சீப்பு வைத்திருப்பார். அதேபோல.. தாடியை ட்ரிம் செய்து கொள்வதற்கான ஷேவிங் சீப்பும் இருக்கும்... அவ்வப்போது தலைமுடியை சுருள் சுருளாக சீவி விட்டுக் கொள்வது மோடியின் மேனரிசங்களில் ஒன்று.. ஆனால் அவரை நீண்டகாலம் கவனிப்பவர்களுக்கு அவரது தலையில் தற்போது ஒரு மாற்றம் வந்திருப்பதைக் உணர முடியும்...
குறிப்பாக 2007-ம் ஆண்டு அவர் தமது தலை வழுக்கையை மறைக்க செயற்கை முடியை அதாவது ஹேர் டிராஸ்பிளான்ட் செய்து கொண்ட பிறகு அவரை கவனிப்பவர்களுக்கு அவரது தலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருக்கும்.
அதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக மற்றும் ஒருமுறை ஹேர் டிராஸ்பிளான்ட் செய்து கொண்டார் மோடி.. இது தலையின் பின்பகுதியில் செய்து கொள்ளப்பட்டது. இதனால் தலையில் இருந்த முடிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது, புது மாப்பிள்ளை கணக்காக ஷோக்காக காட்சியளிக்கிறார் மோடி.
மோடி இப்படி திடீரென தலைமுடி வளர்ச்சியி்ல தீவிர அக்கறை காட்டி வருவதும், தனது கெட்டப்பை மாற்ற முயல்வதும் பல்வேறு கேள்விகளையும், கிசுகிசுப்புகளையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. பிரதமர் பதவிக்கு போட்டியிடும் முன்பு தனது கெட்டப்பை மாற்றிக் கொள்ள அவர் தீர்மானித்திருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications