நாகர்கோவில் வங்கியில் ரூ.20,000 கள்ள நோட்டுகள் பறிமுதல்: பேட்டரி கடை உரிமையாளர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகையை மீட்க பணம் செலுத்தியவர் கொடுத்த நோட்டுகளில் ரூ.20,000 மதி்ப்புள்ள கள்ளநோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும், வங்கிகளில் பணம் செலுத்தும்போது கள்ள நோட்டுகளையும் சேர்த்து புழக்கத்தில் விடுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் உஷார்படுத்தப்பட்டன. மேலும் ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை பரிசோதித்து வாங்குமாறு வங்கி காசாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று நாகர்கோவில் கே.பி. ரோட்டில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கு நாகர்கோவில் செட்டிகுளத்தைச் சேர்ந்த கிரகரி கென்னடி என்பவர் அடகு வைத்த நகையை மீட்க வந்தார்.
அடகு வைத்த நகையை மீட்க வட்டியுடன் சேர்த்து ரூ.9 லட்சம் செலுத்தினார். அவர் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 20 நோட்டுகள் மீது வங்கி ஊழியர்களுக்கு சந்தேகம் வந்தது. அவற்றை பரிசோதித்த போது அந்த 20 நோட்டுகளும் கள்ள நோட்டுகள் என தெரிய வந்தது. உடனே இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சேகர் சிங், சப்-இன்ஸ்பெக்டர் கண்மணி ஆகியோர் பணம் கொண்டு வந்த கிரகரி கென்னடியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் அந்த பணத்தை தன்னுடைய மைத்துனர் கொடுத்ததாகத் தெரிவித்தார். அவரை பிடித்து கேட்டபோது அவர் குலசேகரத்தை அடுத்த திருவரம்பைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து பணம் வாங்கியதாகவும், அந்த பணத்தை தான் கென்னடிக்கு கொடுத்தகாகவும் கூறினார். உடனே திரவரம்பு நபரை பிடித்து விசாரித்தபோது டாக்டர் ஒருவருக்கு தனது நிலத்தை விற்றபோது அவர் கொடுத்த பணம் தான் இது என்றார். போலீசார் டாக்டரை பிடித்து விசாரித்தனர்.
இறுதியில் வங்கிக்கு கள்ள நோட்டுகளை கொண்டு வந்த கிரகரி கென்னடியை கைது செய்தனர். அவரது சொந்த ஊர் திங்கள்சந்தையை அடுத்த காரங்காடு ஆகும். செட்டிகுளம் பகுதியில் பேட்டரி கடை நடத்தி வருகிறார். இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications