கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள்: கேரளா, தமிழகம், கர்நாடக காடுகளில் சோதனை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அடர்ந்த காடுகளில் மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக வனப்பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

வடமாநிலங்களில் நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகள் தங்கள் கேம்பை தென் மாநிலங்களுக்கு மாற்ற முயற்சி செய்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில் கேரளாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக அம்மாநில போலீசாருக்கு உளவுத்துறை தகவல் கொடுத்தது.

இந்த தகவலை கேரள டிஜிபி ஜேக்கப் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

கேரளாவின் அடர்ந்த வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவி்த்தது. ஆனால் காடுகளில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகள் நேரடியாக எந்த செயலிலும் ஈடுபட்டதாக இதுவரை எந்தவித தகவலும் இல்லை. மேலும் சத்தீஸ்கர், ஜார்க்கணட் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள மாவோயிஸ்டுகளுக்கும் இங்குள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது என்றார்.

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடக வனப்பகுதிகளில் 3 மாநில போலீசார் இணைந்து கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+