முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி

கோவையை அடுத்த வீரகேரளம் அருகே உள்ள நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜு என்ற ராஜ்குமார்(25). கட்டிடத் தொழிலாளி. அவர் கட்டிட வேலைக்காக சுண்டக்காமுத்தூருக்கு சென்றார். அங்குள்ள மருத்துவமனையின் பின்புறம் கட்டிட வேலை செய்தார். மதிய உணவின்போது மருத்துவமனை அருகே நாகப்பாம்பும், சாரைப்பாம்பும் பிண்ணிப் பிணைந்து ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தன.
இதைப் பார்த்ததும் அங்கு மக்கள் கூட்டம் கூடினர். ராஜ்குமாரும் அந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த யாரோ ஒருவர் ஆனந்த தாண்டவமாடும் பாம்பிடம் முத்து இருக்கும் தெரியுமா என்று கூறினார். இதைக் கேட்ட ராஜ்குமார் அதை உண்மை என்று நினைத்து நாகப்பாம்பை பிடித்து முத்து இருக்கிறதா என்று பார்த்தார்.
அப்போது நாகப்பாம்பு அவரின் கையில் கடித்தது. சிறிது நேரத்தி்ல அவர் மயங்கினார். உடனே அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
முத்துக்கு ஆசைப்பட்டு பாம்பிடம் கடிபட்டு இறந்த ராஜ்குமாருக்கு லட்சுமி என்ற மனைவியும், 7 மாத குழந்தையும் உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications