மே 22ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவு வெளியீடு-'தட்ஸ்தமிழில்' பார்க்கலாம்!

மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை பிளஸ்டூ தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுவையில் 8.22 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இவர்கள் தவிர 61,319 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.
தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து விடைத்தாள்களைத் திருத்தும் பணி தொடங்கியது. மின்னல் வேகத்தில்நடந்த இந்தப் பணியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் ஈடுபட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 30ம் தேதி முடிந்தது. இதையடுத்து தற்போது மதிப்பெண்களை பட்டியலிடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு முதல் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதனால் கூடுதல் கவனத்துடன் இந்தப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போனது. இதையடுத்து தற்போது அரசு அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்துள்ளது. அதன்படி மே 22ம் தேதி காலை 11 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, பிளஸ்-2 தேர்வு முடிவு வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்றார்.
உங்கள் தட்ஸ்தமிழில்...
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வழக்கம் போல உங்கள் தட்ஸ்தமிழ் இணையத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications