சென்னையிலிருந்து ஷீரடி சென்ற வாராந்திர ரயிலில் திட்டமிட்டு கொள்ளை
சோலாப்பூர்: சென்னையிலிருந்து ஷீரடி சென்ற வாராந்திர ரயிலை மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் என்ற இடத்தில் வழிமறித்து கத்திமுனையில் பயணிகளிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையிலிருந்து வாரந்தோறும் மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் முன்பதிவு அனைத்தும் முழுமையடைந்து கூட்டம் நிரம்பி வழிந்தநிலையில் ஷீரடி நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
இந்த ரயில் மஹாராஷ்டிரா மாநிலம் சோலப்பூர் அருகே நள்ளிரவில் சென்று கொண்டிருந்த போது சிக்னல் கிடைக்காமல் நின்றது...பயணிகள் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கோண்டிருந்தனர். அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்குள் 15 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்தது. கத்தி முனையில் பயணிகளிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர்.
ஷீரடி சாய்பாபாவின் தரிசனத்துக்குப் போகும் வழியில் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ25 ஆயிரம் பணத்தை பக்தர்கள் பறிகொடுக்க நேரிட்டது. சிக்னல் கோளாறை கொள்ளையர்களே ஏற்படுத்திவிட்டு கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சோலாப்பூர் பகுதியில்தான் அதிகளவில் ரயில் கொள்ளைச் சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிப் போய்விட்டது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications