ஆப்கான், ஈரான், சீனா விவகாரம் குறித்து இந்திய பயணத்தில் ஹிலாரி விவாதிக்கிறார்..
டெல்லி: இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் தென்சீனக் கடல் விவகாரம் குறித்து விவாதிப்பார் எனத் தெரிகிறது.
ஹிலாரியின் இந்திய பயணம் நாளை மறுநாள் தொடங்குகிறது. கொல்கத்தாவுக்கு வருகை தரும் ஹிலாரி, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்துப் பேசுகிறார். இச்சந்திப்பின் போது பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவன்ங்களை மேற்கு வங்கத்தில் அமைப்பது தொடர்பாக மமதாவுக்கு ஹிலாரி அழுத்தம் கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.
பின்னர் மே 7-ந் தேதியன்று டெல்லியை வந்தடையும் ஹிலாரி 8-ந் தேதியன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ஆகியோரையும் ஹிலாரி சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இந்த பயணத்தின் போது ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் 2014-ம் ஆண்டு வெளியேறுவது பற்றியும் அந்நாட்டில் வன்முறையற்ற சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் கிருஷ்ணாவுடன் ஹிலாரி விவாதிக்கக் கூடும். மேலும் ஈரானின் அணு ஆயுத விவகாரம் தொடர்பாகவும் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்துவது குறித்தும் ஹிலாரி வலியுறுத்தவும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சீன பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு ஹிலாரி வருவதால் நிச்சயம் தென்சீனக் கடல் விவகாரமும் இந்த ஆலோசனையில் இடம்பெறக் கூடும் எனத் தெரிகிறது. தென்சீனக் கடலில் சீனா ஒருபுறமும் இந்திய, அமெரிக்கா ஒருபுறமும் நின்று கொண்டு பதற்றத்தை உருவாக்கி வரும் நிலையில் தென்சீனக் கடல் பற்றிய எதிர்கால நடவடிக்கைகளை ஹிலாரி கிருஷ்ணாவுடன் ஆலோசிப்பார் என்கின்றன டெல்லி அரசியல் வட்டாரங்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications