பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக முன்நிறுத்துவதற்கு வாய்ப்புகள் குறைவு?
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டாலும் பிரணாப்புக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த விவகாரத்தில் ஊசலாட்டமான மனநிலையே இருப்பதாக கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியே வேட்பாளராக இருப்பாரோ என்று எண்ணும் அளவுக்கு ஊடகங்கள் அனல் பறக்க விவாதங்களை முன் வைக்கின்றன. ஆனால் பிரணாப்பை நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து கட்சிப் பொறுப்பிலிருந்தும் விடுவித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக முன் நிறுத்தினால் ஏற்படும் இழப்புகளை காங்கிரஸ் கட்சி கணக்கிட்டால் பிரணாப் குடியரசுத் தலைவராவதற்கான சாத்தியம் மிகவும் குறைவே என்கிறது அரசியல் வட்டாரம்..
30 ஆண்டுகால கனவு...
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட 1984-ம் ஆண்டிலேயே தம்மை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்திக் கொண்டவர் பிரணாப். அவரைப் பொறுத்தவரையில் பிரதமர் பதவி என்பது நிறைவேறாத 30 ஆண்டுகால கனவுதான் என்று சொல்ல வேண்டும். தன்னை பிரதமராக அறிவிக்க அப்போது பிரணாப் முயற்சித்ததால் ராஜிவ் காந்தியின் கோபத்துக்கு ஆளானவர். இருப்பினும் அவரது சீனியாரிட்டியும் சின்சியாரிட்டியும் ராகுல்காந்தி காலம் வரை தாக்குப் பிடித்து நம்பர் 2- என்ற நிலையில் இருக்க வைத்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, கூடுதல் இடங்களைப் பெற வேண்டும் என்கிற கட்டாயத்தில் நிச்சயமாக பிரணாப்பை குடியரசுத் தலைவராக்கி ஒதுக்கிவிட காங்கிரஸ் முடிவு செய்யாது.
சமரச தூதர்
அதேபோல் காங்கிரஸ் கட்சி ஒன்றும் தனித்து பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. காங்கிரஸை அசைத்துப் பார்க்கக் கூடிய கூட்டணிக் கட்சிகளுடன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் ஆட்சி அமைத்திருக்கிறது. ஏதோ ஒரு விவவாகரத்தில் எப்படியாவது ஒரு கூட்டணிக் கட்சி முறுக்கிக் கொண்டுதான் நிற்கும். குறிப்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருக்கக் கூடிய திமுகவும் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸும் தவிர்க்க முடியாத கட்சிகள்.
இந்த இரண்டு கட்சிகளும் முறுக்கிக் கொண்டால் சமரச தூதராக சென்று சாதிக்கக் கூடியவராக இருப்பவரும் பிரணாப் முகர்ஜிதான். இன்னும் இரண்டு ஆண்டுகாலத்துக்கு சிந்தாமல் சிதறாமல் ஆட்சி காலத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கருதுமேயானால் நிச்சயம் பிரணாப்பை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வழி அனுப்பி வைக்காது அந்தக் கட்சி.
மேலும் 2014-ம் ஆண்டு தொங்கு நாடாளுமன்றம் அமையும் நிலையில் தமது 30 ஆண்டுகால கனவான பிரதமர் பதவியை நிறைவேற்றிக் கொள்ளத் தருணம் வந்தால் என்ன செய்வது என்று பிரணாப்முகர்ஜி கணக்குப் போட்டால் நிச்சயம் அவர் குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் போவதை விரும்பமாட்டார்தான்...
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications