For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளத்திற்கு ஜெ. அனுமதி அளித்ததால் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததாம் இந்தியா!

Google Oneindia Tamil News

Manmohan singh and Jayalalitha
கொழும்பு: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்ததால், அதற்கு பிரதியுபகாரமாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்திய அரசு வாக்களிக்க முடிவு செய்ததாக இலங்கையின் திவயின என்ற நாளிதழ் ஒரு செய்தியைப் போட்டுள்ளது.

இந்த நிமிடம் வரை தங்களுக்கு எதிரான ஒரு நீர்த்துப் போன தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு அளித்தது குறித்து பொங்கிப் பொறுமிக் கொண்டுள்ளனர் இலங்கையர்கள். இந்த நிலை ஏற்பட என்ன காரணம் என்று அவர்கள் ஆளாளுக்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், திவயின என்ற நாளிதழில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில், ஜெயலலிதாதான் இலங்கைக்கு எதிராக இந்தியா செயல்படக் காரணம் என்பது போல சொல்லியுள்ளனர்.

இதுகுறித்து அந்த செய்தியில் கூறியிருப்பதாவது...

கூடங்குளம் அணுமின் நிலையத்தை சமூகமாக முறையில் இயங்கச் செய்ய முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்ததே, இந்தியாவின் இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம்.

அணு உலை உருவாக்கத்திற்கு ஆதரவளித்தமையினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக இந்திய அரசாங்கம் வாக்களிக்க முடிவுசெய்தது.

இதை பிபிசியின் இந்தியப் பிரிவு செய்தியாளர் நரேன் பூஷன் உறுதி செய்துள்ளார்.இலங்கைக்கு எதிராக வாக்களித்தால்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு தமிழக அரசு ஆதரவு தரும் என்று மத்திய அரசிடம், முதல்வர் ஜெயலலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்தே மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டு இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வந்தது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

English summary
A Lankan daily has said that Tamil Nadu chief minister Jayalalitha used Kudankulam card to force Indian govt to go against Sri Lanka in UNHRC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X