'நித்தியானந்தாவை மாதா அமிர்தானந்த மயி ஆதரிக்கவில்லை'
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நித்தியானந்தா, தன்னை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், பாமக தலைவர் ஜி.கே.மணி, அமிர்தானந்த மயி உள்ளிட்டோர் ஆதரித்துள்ளதாக கூறியிருந்தார்.
இதற்கு மாதா அமிர்தானந்த மயியின் மடம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்தமடம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
இந்த விஷயம் குறித்து யாரும் என்னிடம் கேட்கவில்லை. இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதை பற்றி யாரிடமும் நான் ஒன்றும் கூறவுமில்லை என்று மாதா அமிர்தானந்த மயி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நித்தியானந்தாவின் கருத்து குறித்து ஜி.கே.மணி தரப்பிலோ அல்லது பிறர் தரப்பிலோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications