தமிழ்நாட்டில் மேல்சபையை ரத்து செய்யும் மசோதா- மாநிலங்களவையில் தாக்கலானாது
Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் மேலவையை அமைப்பதற்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் 2010-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி நிறைவேறியது. இதனடிப்படையில் தமிழகத்தில் மேலவையை அமைப்பதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்த ஆண்டு ஜூன் 7-ந் தேதியன்று தமிழகப் பேரவையில் இந்த மேலவையை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் தமிழகத்தில் மேலவையை ரத்து செய்யக் கூடிய வகையில் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மேலவையை அமைக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications