கொலை வழக்குகளில் கண்மூடித்தனமான ஜாமீன் வழங்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

வழக்கு என்ன?
கொலை வழக்கு ஒன்றில் ஒடிசா உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டோருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. ஆனால் அவர்களை கீழ் நீதிமன்றம் முன்பாக சரணடையுமாறும், சரணடையும்போது தகுதியிருப்பதாக கருதினால், நிபந்தனை ஜாமீன் கொடுக்குமாறு கீழ் நீதிமன்றத்தை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு ஜாமீன் கிடைத்தது.
இதை எதிர்த்து கொலையானவரின் சகோதரி ரஷ்மி ரேகா தட்டோய் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் அவசியமானதுதான். ஆனால் ஜாமீன் அளிக்கும்போது சட்ட விதிகளை நீதிமன்றங்கள் மீற முடியாது' என்று கூறினர்.
நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா பெஞ்ச் அளித்த தீர்ப்பு:
குற்றம்சாட்டப்பட்டவர்கள் சரணடையும்போது அவர்களுக்கு தகுதியிருந்தால் நிபந்தனைகளுடன் ஜாமீன் அளிக்குமாறு உயர் நீதிமன்றங்கள் முந்தைய காலங்களில் உத்தரவிட்டதாக தெரியவில்லை. ஜாமீன் வழக்கில் மேல் நீதிமன்றங்கள் இது போன்று கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் தெரியவில்லை.
முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுக்கும்போது, கைது நடவடிக்கையை தவிர்க்கும் விதமான பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உயர்நீதிமன்றத்தால் வழங்க முடியாது.
இந்த வழக்கில் சட்ட விதிகளும், முந்தைய வழக்கில் வழங்கப்பட்ட மேற்கோள்களும் மீறப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள் கண்மூடித்தனமாக ஜாமீன் வழங்க முடியாது. இடைக்கால உத்தரவை மட்டுமே வழங்க முடியும். அதுவும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டே இடைக்கால உத்தரவை வழங்க முடியும்.
சரணடைபவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூறும் உத்தரவு சட்டப்படி செல்லாது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதோடு, கீழ் நீதிமன்றங்களின் அதிகாரங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்று அவர்கள் தீர்ப்பளித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications