குஜராத் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைத் தாக்க லஷ்கர் இ தொய்பா திட்டம்

Subscribe to Oneindia Tamil

ஜாம்நகர்: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைத் தாக்க பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ல் மும்பை நகர் மீது லஸ்கர் இ தொய்பா இயக்கத்தினர் அதிரடித் தாக்குதல் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இலக்காக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அரசு மற்று தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் பக்கம் திரும்பியுள்ளது.

கட்ச் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலைகளை கடல் வழியே ஊடுருவித் தாக்குதல் நடத்த லஸ்கர் இயக்கம் திட்டமிட்டிருப்பதாகவும் இத்தாக்குதலில் ஈடுபடக் கூடும் என சந்தேகிக்கப்படுகிற 5 தீவிரவாதிகளின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தகவல் கசிந்தது எப்படி?

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் லாரி ஓட்டுநர் ஒருவர் ஐந்து டிரைவிங் லைசென்சுகளை எடுத்திருந்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் உண்மைகளை அவர் கக்கியுள்ளார். அவர் எடுத்திருந்த ஐந்து லைசென்சுகளுமே லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்குரியது என்றும் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பே குஜராத் மாநிலத்துக்கு வந்துவிட்டதாகவும் லாரி ஓட்டுநர் கூறியுள்ளார். தற்போது குஜராத்தில் உள்ள ஐந்து பேரும் லாரி ஓட்டுநராக எண்ணெய்சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நுழைந்து தாக்குதல் நடத்தவும் அவர்களுக்கு ஆதரவாக கடல்வழியே ஒரு தீவிரவாதக் கும்ப்ல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு வெளியே தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த ஓட்டுநர் கூறிய தகவலையடுத்தே குஜராத் உளவுத்துறையும் காவல்துறையும் பரபரப்பாகி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஜாம்நகரில் கடலோரப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள துவாரகை கோயிலையும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறிவைத்துத் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அரபிக் கடலில் அமைந்துள்ள துவாரகை மற்றும் பெட் துவாரகை எனப்படும் ஆதி துவாரகை ஆகிய இரண்டு கோயில்களுக்குமே பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+