டெல்லிக்கு போன ஒரு சாமி.. புதுச்சேரி வந்துட்டா இன்னொரு சாமி.. நாராயணசாமி!

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் அவர் பேசுகையில்,
டெல்லியில் நடந்த தேசிய தீவிரவாத ஒழிப்பு மைய ஆலோசனை கூட்டத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளை சேர்ந்த பல முதல்வர்கள் பங்கேற்றனர். ஆனால், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல் தலைமை செயலாளரை அனுப்பி வைத்துள்ளார். இது புதுவை மக்களை அவமதிக்கும் செயல்.
புதுச்சேரியில் 'தானே' புயல் நிவாரணம் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. நிவாரணத்துக்காக மத்திய அரசு வழங்கிய ரூ. 125 கோடியில் ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தும். அமைச்சர்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை என்று ஒரு அமைச்சர் பேசுகிறார். அந்த அதிகாரியை தூக்கி வீச வேண்டியது தானே?. அதிகாரிகள் தவறு செய்வதாக எங்களுக்கு தகவல் வருகிறது. இதனை சொன்னால் அதிகாரிகளை மிரட்டுகிறோம் என்று கூறுகிறார்கள். அதிகாரிகள் தவறு செய்தால் தட்டிக் கேட்கும் உரிமை மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு.
சோனியாவின் ஆதரவு கிடைக்கும் என்று ரங்கசாமி நினைத்து டெல்லி சென்றார். ஆனால், அவரை சந்தித்த சோனியா காந்தி நேரம் கொடுக்கவில்லை.
புதுச்சேரியிலிருந்து போகும் போதும் டெல்லியிலிருந்து கிளம்பும்போதும் ரங்கசாமி காங்கிரஸ் கட்சிக்காரராக புறப்படுவார். மகாபலிபுரம் வந்த உடன், என்.ஆர்.காங்கிஸ்காரராக மாறிவிடுவார். ரங்கசாமி எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு வரமாட்டார். சோனியா காந்தி எங்களைக் கேட்காமல் அவரைக் கட்சியில் சேர்க்கமாட்டார் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications