நாடாளுமன்ற மக்களவையில் நிதிமசோதா நிறைவேற்றம்
டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் 2012-13ம் ஆண்டுக்கான நிதி மசோதா செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "வர்த்தக வாகனங்களுக்கான சேசிஸ், பால்பாய்ண்ட் பேனாவுக்கான மை, பாலியஸ்டர் இழை, கழிவுப் பொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நூல், காலணி தாயரிப்புக்கான சில பொருள்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசின் உற்பத்தி வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சூரிய மின் உற்பத்திக்கான உதிரிபாகங்கள், சூரிய சக்தியை சேமிக்கும் மின்கலன் தயாரிப்புக்கான உதிரிபாகங்கள் ஆகியவை சுங்கவரி விதிப்பில் இருந்து விலக்குப் பெற்றுள்ளன. எனவே அவற்றின் விலையும் குறையும்' என்றார்.
இதைத் தொடர்ந்து வர்த்தக வாகனங்களுக்கான சேசிஸ், பால் பாய்ண்ட் பேனா மை, சூரிய மின்சக்தி உற்பத்திக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலை சற்றே குறைய இருக்கிறது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றபின் மாநிலங்களவையில், நிதிமசோதா நிறைவேற்றப்படும்.












Click it and Unblock the Notifications