2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: மத்திய அரசு 'யு டர்ன்': சுப்ரீம் கோர்ட்டில் மனுவை வாபஸ் பெறுகிறது!

Subscribe to Oneindia Tamil

Charmi
டெல்லி: 9 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவைத் வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 2ஜி லைசென்ஸ்களை ரத்து செய்தும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும், ஏலம் மூலம்தான் 2ஜி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இதை நீதிபதிகள் சிங்வி, ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், தீர்ப்பில் மத்திய அரசை விமர்சித்தது, ஏலம் விடுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு, இயற்கை வளங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்ட கருத்து போன்றவை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீதான தங்கள் பதிலை தாக்கல் செய்யும்படி 2ஜி வழக்கு தொடர்ந்த தன்னார்வ அமைப்பு மற்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து 122 லைசென்ஸ்களை ரத்து செய்த தீர்ப்பு குறித்து விளக்கம் கோரி ஜனாதிபதி மூலமாகவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியது. இதற்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் தர உள்ள நிலையில், தான் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நாளை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை விசாரிக்கும் நீதிபதிகள், தங்களுக்கு எதிராக தீர்ப்பளித்துவிட்டால், இந்த விவகாரத்தில் அதன் பிறகு தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று மத்திய அரசு கருதுகிறது.

அதே நேரத்தில் ஜனாதிபதி மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு தரப்படும் பதிலை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே மறு ஆய்வு மனுவை மத்திய அரசு வாபஸ் பெற முடிவெடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+