ஜூன் மாதத்தின் பெயர் இனி 'கலைஞர் மாதமாம்'.. சொல்கிறது திமுக மாணவர் அணி!

தி.மு.க மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்கள் கிரேக்க, ரோமானிய மன்னர்கள் மற்றும் கடவுளர்கள் பெயரில் அழைக்கப்படுகின்றன.
இனி தி.மு.க மாணவரணியினர், திமுக தலைவர் பிறந்த ஜூன் மாதத்தை கலைஞர் மாதம் என்றே அழைப்பார்கள். எங்கு எழுதினாலும் பேசினாலும் இனி மாணவரணி ஜூன் மாதம் என்பது கலைஞர் மாதம் என்றே குறிப்பிடப்படும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாம். இது பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஜூன் மாதம் என்பதற்குப் பதில் கலைஞர் மாதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி,
- கலைஞர் மாதம் 3-ம் தேதி திராவிட இயக்க எழுச்சி நாள். பகைவர்கள் சூழ்ச்சிகளை வீழ்த்தி நம்மை அன்பால் ஆட்கொண்ட கருணாநிதியின் 89-வது பிறந்தநாள் விழாக்களை திராவிட இயக்க எழுச்சி நாளாக நாடு முழுவதும் கொண்டாட முடிவுசெய்யப்பட்டது.
- கலைஞர் மாதம் 3-ம் தேதியன்று அறிவாலய வளாகத்தில் ரத்ததான முகாம் மற்றும் 89 மாணவர்கள் கண்தானம் வழங்குதல் ஆகியவை திராவிட இயக்க எழுச்சி நாளின் முதல் தொடக்க நிகழ்வாக நடைபெறும்.
- அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை மூடி கிண்டியில் உள்ள ஒருமைப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைத்ததன் காரணமாக 5 இடங்களில் அண்ணாவின் பெயரை நீக்கியுள்ளதால் ஆராய்ச்சி மாணவர்களின் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை முறையாக நடத்த வேண்டி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவர் அணியின் சார்பாக ஜெயலலிதாவின் மாணவர் விரோத செயல்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் கல்வி வழங்குவதில் இடைஞ்சல் செய்து வந்தால் விரைவில் மிகப்பெரும் சரிவை சந்திக்க வேண்டி வரும் என இக்கூட்டம் எச்சரிக்கை செய்கிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல அண்ணா பிறந்த செப்டம்பர் மாதத்தை அண்ணா மாதம் என்று அழைப்பார்களா என்று தெரியவில்லை.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications