உள்துறை அமைச்சகத்தில் பாஜக எம்.பிக்கு அவமரியாதை- மக்களவையில் சலசலப்பு
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளால் பாரதிய ஜனதா எம்.பி. ஒருவர் அவமதிக்கப்பட்ட விவவகாரம் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.]
பாஜகவைச் சேர்ந்த பிஸ்னுபத் ராய் அந்தமான் நிக்கோபர் தொகுதி எம்.பியாவார். தமது தொகுதி விவகரம் தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்திக்க சென்ற போது தம்மிடம் தரக்குறைவாகவும் அவமரியாதையாகவும் அவர்கள் நடந்து கொண்டனர் என்று மக்களவையில் புகார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மக்களவை சபாநாயகர் மீராகுமார், இந்த அவையின் எந்த ஒரு உறுப்பினருக்கும் சிறு அவமதிப்பு ஏற்பாட்டாலும் அதை மிகவும் வருந்தக்கூடிய விஷயம். ஒவ்வொரு உறுப்பினரின் கண்ணியத்தையும் கெளரவத்தையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு. உறுப்பினரின் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
ஆனாலும் பாரதிய ஜனதா மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பவன்குமார் பன்சால், எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் தரக்குறைவாக அவமரியாதையாக நடத்தப்பட்டிருந்தால் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இருப்பினும் பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்தும் குரல் எழுப்ப மீண்டும் குறுக்கிட்டுப் பேசினார் சபாநாயகர் மீரா குமார். அப்போது அவையை நடத்துவது மட்டும் எமது பொறுப்பில்லை... ஒவ்வொரு உறுப்பினரின் மரியாதையையும் அவர்களது பாதுகாப்பையும் உறுதி செய்வதும் எமது பணி என்று மீண்டும் அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications